தமிழக மீனவர்கள் 35 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு.! இலங்கை நீதிமன்றம்..!!

Senthil Velan

புதன், 11 செப்டம்பர் 2024 (17:15 IST)
தமிழக மீனவர்கள் 35 பேரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீடித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நான்கு நாட்டுப் படகுகளில் கடலுக்குச் சென்ற  35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 35 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் மீனவர்களின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்   புத்தளம் நீதிமன்றத்தில் 35 பேரும் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா, மீனவர்கள் 35 பேருக்கும் செப்டம்பர் 18-ம் தேதி வரை  நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் நான்காவது முறையாக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: கேபி முனுசாமிக்கு அனுமதி மறுப்பு.! அதிகார மமதையில் அவமதிக்கும் திமுக - இபிஎஸ் கண்டனம்.!!
 
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் வாயிலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசின் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்