தமிழக மீனவர்கள் படகின் மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்.. 4 பேர் படுகாயம்..!

Siva

புதன், 11 செப்டம்பர் 2024 (08:02 IST)
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை கப்பல் மோதியதாகவும் இதில் நான்கு மீனவர்கள் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை சக மீனவர்களுக்கு காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர் என்றும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் இந்த தொடர் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை  கடற்படை    கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதியதாகவும் இதில் படகு கவிழ்ந்து நான்கு மீனவர்கள் கடலில் தத்தளித்ததாகவும் கூறப்படுகிறது. இதை எடுத்து சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாகவும் படுகாயம் அடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் நிலையில் தற்போது படகின் மீது மோதியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்