மகளை 4 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டுகள் சிறை

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:23 IST)
அமெரிக்காவில் உள்ள பிரஸ்னோ என்ற இடத்தில் மகளை 4 வருடங்கள் பலாத்காரம் செய்த கொடிய குற்றம் புரிந்தவருக்கு 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். 

 
இதுவரை இவ்வளவு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதில்லை.  குற்றவாளி கடந்த 2009 ஆண்டு மே மாதம் முதல் 2013ம் ஆண்டு வரை மகளை தனது ஆசைக்கு இணங்கவைத்து பல்வேறு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுத்தால் அடிஉதை என கொடுமையும் செய்து உள்ளார்.
 
இவர் செய்த குற்றம் குறித்து நீதிபதி கூறும்போது, “இவன் சமூகத்திற்கு மிகவும் அபாயமானவன். இவனை வெளியே விட்டால் பலரை இவனை போல மாற்றிவிடுவான்” என கூறி இவருக்கு 1,503 ஆண்டுகள் தண்டனை வித்து தீர்ப்பளித்தார்.
அடுத்த கட்டுரையில்