சீரியலில் நடிக்கவுள்ள ஸ்ருதி ஹாசன்! என்ன இவங்க நிலைமை இப்படி ஆகிடிச்சு!

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (15:35 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி. 
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.
 
காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன்  சமீபநாட்களாக கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வழிதேடி வந்தவர் தற்போது சீரியலில் நடிக்கவுள்ளார். அதுவும் தமிழ் சீரியல் இல்லைங்க ஹாலிவுட் சீரியல்.
 
ஸ்ருதி ஹாசன் தற்போது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள “ டிரெட்ஸ்டோன் ” என்ற ஹாலிவுட் சீரியலில் நடிக்க உள்ளார். அந்த சீரியலில்  ஸ்ருதி ஹாசன் நீரா படெல் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் அவர் டெல்லியில் ஒரு ஹோட்டலில் பணியாளராக வேலைசெய்யும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 


 
ட்ரெட்ஸ்டோன் சீரியலை பென் ஸ்மித் தயாரிக்கிறார். இதில் ஸ்ருதியை தவிர, மைக்கேல் ஃபோர்ப்ஸ், பாட்ரிக் ஃபுஜித், மைக்கேல் கேஸ்டன், டெஸ் ஹெளப்ரிச் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.இந்தத் தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்