சுவையான கொண்டைக்கடலை கறி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
வெங்காயம் - 100 கிராம் 
தக்காளி - 200 கிராம் 
இஞ்சி - 20 கிராம் 
பூண்டு - 50 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான உப்பு
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி 
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி  
கரம் மசாலா - 1 தேக்கரண்டி 
கொண்டைக்கடலை - 500 கிராம்

செய்முறை:
 
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரவை இயந்திரத்தில் மைய அரைக்கவும். அரைத்த விழுதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய்விட்டு மிதமான அனலில் சூடாக்கவும். அரைத்த சாந்தை வாணலியில் போட்டு, லேசாகப் பொன்னிறப் பழுப்பு நிறமாக மாறி வாசம் வரும்வரை வதக்கவும். விழுதுடன் உப்பு, சீரகத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, 3 நிமிடங்களுக்கு  நன்றாகக் வதக்கவும்.
 
கலவை நன்கு சூடானதும், தண்ணீரைச் சேர்த்து கெட்டியான குழம்புபோல வரும் வரை கிளறுங்கள். அடுத்து அதைக் கொதிக்கவிடவும். சுத்தம் செய்து வைத்துள்ள கொண்டைக் கடலையைச் சேர்த்து நன்கு வேகவைக்கவும். கொண்டைக் கடலை வெந்து கொண்டிருக்கும்போதே, அவற்றில் சிலவற்றை நசுக்கவும். வாணலியை  மூடிவைத்து 5 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். சுவையான கொண்டைக்கடலை கறி தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்