* பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.
* வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.
* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி சப்பாத்திகளாக தேய்க்கவும்.
* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.