பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும். இறக்கும்போது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும். சூப்பரான பன்னீர் சுக்கா தயார்.