வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.