வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை...!!

Webdunia
முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது.  மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. 
கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.
 
இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அழிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை சாப்பிடு என்றும், சாஸ்திரப்படி வீடு  கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.
 
“வாஸ்து” என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்