மத்திய பட்ஜெட் : தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:49 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்    அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது, பல சலுகைகளை அறிவித்த அவர், எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். எனவே, வருமான வரி விலக்காக உள்ள ரூ.2.5 லட்சம் அப்படியே தொடரும் என அவர் அறிவித்தார்.
எனவே, ஏற்கனவே உள்ள,
 
0 -2.5 லட்சம் வரை - வரி இல்லை
 
2.5 - 5 லட்சம் - 5 சதவீத வரி
 
5-10 லட்சம் - 20 சதவீத வரி
 
10 லட்சத்திற்கும் மேல்  - 30 சதவீத வரி அப்படியே தொடர்கிறது.
 
வருமான வரி செலுத்தும் மாத ஊதிய தாரர்களுக்கு நிரந்த கழிவு தொகையாக ரூ.40 ஆயிரம் சலுகை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அரசு எதிர்பார்த்த வருவாய் இல்லை எனவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்