மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடையே திடீர் மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக - மக்கள்நல கூட்டணி - தமாகா சார்பில் திருச்சியில் மே 11 ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என்றும், இந்த மாற்று அரசியல் வெற்றி மாநாட்டில் தொண்டர்கள் மற்றும கூட்டணிக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காரணம், கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவதாக வைகோ அறிவித்தார். இதற்காகவே கூட்டணி கட்சிகளிடம் இந்த தொகுதியை போராடி பெற்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் பேரவை தேர்தலில் வைகோ போட்டியிடுவதால், தொண்டர்களும் உற்சாகமாக தேர்தல் வேலைகளைத் தொடங்கினர்.
கோவில்பட்டியில் தொகுதியில் போட்டியிட வைகோ முடிவு செய்து களம் இறங்கினார். பின்பு, திடீரென தனது முடிவை வாபஸ் பெற்றார்.
ஆனால், இந்த முடிவை மறுசீலனை செய்ய வேண்டும் என விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கையை வைகோ புறக்கணித்தார்.
இதனால், வைகோ மாநாட்டை விஜயகாந்த் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இருவர் இடையே உள்ள மோதல் நூலிழையாக வெடித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.