திருச்சியில் 11ம் தேதி மாற்று அரசியல் வெற்றி மாநாடு: விஜயகாந்த் பங்கேற்கவில்லை

Webdunia
திங்கள், 9 மே 2016 (12:25 IST)
தே.மு.தி.க. - மக்கள்நல கூட்டணி - த.மா.கா. சார்பில் திருச்சியில் 11ம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் மாற்று அரசியல் வெற்றி மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.


 

தே.மு.தி.க. - மக்கள்நல கூட்டணி - த.மா.கா. சார்பில் திருச்சியில் 11-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறும் மாற்று அரசியல் வெற்றி மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பிரமிக்கத்தக்க வெற்றிச் சாதனையைப் படைக்க இருக்கும் தே.மு.தி.க. - மக்கள்நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியினருடன் கரம் கோர்த்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகள் இணைந்து நடத்தும் மாற்று அரசியல் வெற்றி மாநாடு, திருச்சி மாநகரில் மே 11-ம் நாள் புதன்கிழமை மாலை 4 மணி அளவில், திருச்சி - மதுரை நெடுஞ்சாலைக்கு மேற்கே அமைந்துள்ள பரந்த மைதானத்தில் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் அவைத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு ஆகியோர் இம்மாநாட்டில் உரை ஆற்றுகின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் மக்கள் நல கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் பங்கற்கவில்லை என்று கூறப்படுகிறது. கோவில்பட்டியில் போட்டியிடுவதாக இருந்த வைகோ திடீரென விலகினார். கூட்டணி கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்காமல் தனிசையாக அவர் முடிவெடுத்ததாக தெரிகிறது. இதனால் விஜயகாந்த் வைகோ மீது கோபத்தில் உள்ளார் என்றும், அதனால் இந்த மாநாட்டில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்