சினேகனை அறையப் போறேன் - கொதித்தெழுந்த பிந்துமாதவி

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:31 IST)
பிக்பாஸ் வீட்டில் இடம் பெற்றிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


 

 
கடந்த சில நாட்களாக, அந்த வீட்டில் இருப்பவர்கள் உள்ள பெரும்பாலானோர் ஒருவருக்கொருவர் சண்டை போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ரைசா மீது காயத்ரி கோபம் அடைந்தார். அதனால், அவர்களுக்கிடையே விரிசல் உண்டானது. அதன் பின், தன்னை தூங்க விடுங்கள்.. இல்லையேல் வெளியே அனுப்பி விடுங்கள் என ரைசா பிக்பாஸிடம் சண்டை போட்டார். அதன்பின் சினேகனிடம் ரைசா சண்டை போட்டார். 
 
இந்நிலையில், ‘இன்று பிக்பாஸ் வீட்டில்’ என்ற தலைப்பில் ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், சினேகனை பற்றி கோபமாக பேசும் நடிகை பிந்துமாதவி, அவரை அறையப் போகிறேன் என ரைசாவிடம் கூறுகிறார். அதன் பின், அவர் வயதில் பெரியவர்.. அவரை அப்படி கூறக்கூடாது என வையாபுரி பிந்து மாதவியிடம் கூற, தவறுக்கும், வயதிற்கும் சம்பந்தம் இல்லை என ஆவேசமாக கத்துகிறார் பிந்துமாதவி.. 
 
இதன் தொடர்ச்சி இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்