பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறியதற்கு பின், அந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக பிந்து மாதவியை உள்ளே அனுப்பினார்கள். ஆனால், அவரால் எந்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று புரொமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சியினர் வெளியிட்டுள்ளனர். அதில், ரைசா மீது உள்ள கோபத்தில் வையாபுரி எதையோ தூக்கி வீசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ரைசா சினேகனிடம் கோபமாக பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு சினேகன் பொறுமையாக பதில் கூற, ஆத்திரம் அடைந்த ரைசா, இதுபற்றி பேச வேண்டாம்.. தயவு செய்து இங்கிருந்து சென்றுவிடுங்கள் எனக் கூறுகிறார். ஆனால், சினேகன் அங்கிருந்து கிளம்பி செல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, கடுப்பான ரைசா அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
கடந்த சில நாட்களாக கோபமாகவே இருக்கிறார் ரைசா. என்னால் சரியாக தூங்க முடியவில்லை. என்னை இங்கிருந்து அனுப்பி விடுங்கள் என பிக்பாஸிடம் சண்டை போட்டார். எனவே, போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விடுவார் எனத் தெரிகிறது.