மீனம்: ஆவணி மாத ராசி பலன்கள்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:39 IST)
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நட்பினை உயிரை விட மதிக்கும் மீன ராசியினரே இந்த மாதம்  வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. 
 
தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
 
பூரட்டாதி:
இந்த மாதம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும்  அனுசரித்து  செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
 
ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.    
 
பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 17, 18; செப்டம்பர் 14, 15.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்