’லவ்வுன்னா காம்பெட்டிஷன் வேனும்’ - வாலு படத்தின் ட்ரெய்லர்

Webdunia
சனி, 27 ஜூன் 2015 (18:06 IST)
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் வெளியாகவுள்ள வாலு திரைப்படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிக்கும் திரைப்படம் வாலு. அதேபோல 2013ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்திற்கு பிறகு வெளியாகவிருக்கும் சிம்புவின் திரைப்படமும் இதுதான்.
 
இந்த திரைப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இவர்களுடன், சந்தானம், விடிவி.கணேஷ், பிரமானந்தம், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். ஒரு வழியாக ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ட்ரெய்லர்: