காலத்தை கடந்து பயணம் செய்வது - ‘இன்று நேற்று நாளை’ பர்ஸ்ட் லுக் டீஸர்

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (17:51 IST)
ஜீவா, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள இன்று நேற்று நாளை படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகியுள்ளது.
 
’ஜீவா’ படத்திற்குப் பிறகு விஷ்ணு நடித்து வரும் படம் ‘இன்று நேற்று நாளை’. இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார்.
 

 
திருக்குமரன் எண்டர்டென்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை ரவி இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் கருணாகரன் விஷ்ணுவிற்கு நண்பனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே: