அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அவர் அஜித்தின் படத்திற்கு எப்போதும் வித்தியாசமான அதேசமயம் எல்லோரு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அமைப்பது வழக்கம்.இந்நிலையில், வலிமை பட சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், தற்போது யுவன் இப்படத்திற்கான இசையமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குநர் போனி கபூர் தயாரித்துவருகிறார்.
இப்படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். சமீபத்தில் அஜித்தின் மேலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டிருந்தார்.
அதில், ப
டப்பிடிப்பினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித்குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படம் அப்டேட் குறித்து உரிய முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் , அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு வலிமை அப்டேட் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யுவன்சங்கர் ராஜா, வலிமை படத்திற்கான இசையமைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து யுவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.#valimaiValimai