மேலும், தனுஷ் நடித்த தொடரி, ஜோதிகாவின் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், ரஜினியின் 2.0 மற்றும் விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் மீது சக நடிகையான அனன்யா ராம்பிரசாத் என்பவர் பாலியல் புகார் தெரிவித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மாயா எஸ் கிருஷணனால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை விலாவாரியாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் அனன்யா
நான் அதில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்துக் கொண்டிருக்கிறேன். நான் செக்சுவலாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, பாலியல் கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்.
நான் மாயா கிருஷ்ணனை கடந்த 2016ல் சந்தித்தேன். அப்போது நான் ஒரு புது மாணவி. அந்த காலக்கட்டத்தில் மீடியா துறையில் மாயா வளர்ந்து வரும் பிரபலமாக இருந்தார். ஆகையால், ரிஹர்சல் நேரங்களில் அவர் என் மீது விருப்பமாக இருந்தது, எனக்கு வழிகாட்டியாக நிறைய அட்வைஸ் செய்தார். அதனால் நான் அவரை நம்பினேன்.
பிறகு எனக்கு நடக்கும் அநாகரிக செயல்களை என் தெரபிஸ்ட் தான் என்னிடம் விளக்கமாக சொன்னார். மேலும் நான் செக்ஸுவல் ரீதியாகவும், மன மற்றும் உணர்ச்சி ரீதியாக மாயாவால் துன்புறுத்தப் பட்டிருக்கிறேன் என்று விளக்கமாக கூறினார்.