ஓவியாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆரவ்

புதன், 31 அக்டோபர் 2018 (12:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ்வின் பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ஓவியா கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா மற்றும் ஆரவ் இடையே நடந்த காதல்-மோதல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டே வெளியேறினார்.
 
தற்போது பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். மேலும்  பொது இடங்களிலும் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் பொது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருவது அவர்களின் வழக்கம்.  
 
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரவ்வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்