கடந்த சில மாதங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் பந்தயத்தில் இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் அஜித் குமார் மற்றும் அவரது அணி, 911 ஜிடி3 ஆர் பிரிவில் (901) மூன்றாம் இடத்தை பெற்றதோடு, ஸ்பிரிட் ஆப் தி கேம் விருதையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, மார்ச் 23 அன்று நடைபெற்ற முகெல்லோ 12ஹெச் பந்தயத்திலும் அதே திறமையுடன் பங்கேற்று, ஜிடி992 பிரிவில் 3வது இடத்தை அடைந்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, அஜித் குமார் தனது அணியினருடன் இந்திய தேசியக் கொடியை ஏந்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். அத்துடன், போட்டிக்குப் பிறகு அவரைக் காண வந்த ரசிகர்களுடன் சேர்ந்து வெற்றிக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.