ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (22:33 IST)
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ‘பூமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார்.  இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த டி இமான் இசையமைத்து வருகிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல ராப் பாடகர் யோகி பி அவர்கள் பாடவிருப்பதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவெ ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பொல்லாதவன், கஜினி, எந்திரன், குருவி, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி 2, விவேகம், காலா உள்பட பல தமிழ்ப்படங்களில் ராப் பகுதி பாடலை பாடியுள்ளார்.
 
டட்லி ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில் தாமரை மற்றும் மதன்கார்க்கி பாடல் வரிகளில் ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்