டி.இமானுடன் சண்டை போட்ட மனைவி

Webdunia
வியாழன், 11 மே 2017 (15:00 IST)
பாடலாசிரியர் யுகபாரதியுடன் அடிக்கடி பேசுவதால், தன் மனைவி தன்னுடன் சண்டை போடுவதாகத் தெரிவித்துள்ளார்  இசையமைப்பாளர் டி.இமான்.

 
பல வருடங்களாக சினிமாவில் போராடிவந்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு, பிரபு சாலமனின் ‘மைனா’ படம் திருப்புமுனையைக் கொடுத்தது. பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளும் அதற்கு முக்கியக் காரணம். அதனால், யுகபாரதி மேல் இமானுக்கு தனி அன்பு உண்டு.
 
இதனால், தன்னுடைய பெரும்பாலான பாடல்களை யுகபாரதிக்கு எழுதக் கொடுக்கிறார் டி.இமான். பாடல்கள் தவிர்த்து,  தன்னுடைய பர்சனல் விஷயங்களைக் கூட யுகபாரதியிடம் பகிர்ந்து கொள்வார் இமான். இதனால், இருவரும் அடிக்கடி போனில்  பேசிக் கொள்வார்கள்.
 
இதைப் பார்த்த இமானின் மனைவி, அவருடன் சண்டை போட்டுள்ளார். ‘வீட்டைவிட்டுப் போனால் என்னை மறந்து விடுகிறீர்கள். ஆனால், அவருக்கு மட்டும் இத்தனை முறை போன் செய்திருக்கிறீர்கள்’ என்று போன்கால் லிஸ்ட்டைக் காட்டி செல்லச் சண்டை போடுகிறாராம். இந்தத் தகவலை இமானே தெரிவித்து உள்ளார்.
அடுத்த கட்டுரையில்