திரிஷா விலகியது ஏன்? சிரஞ்சீவி தரப்பு விளக்கம்!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (16:21 IST)
சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமான ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா ஏன் விலகினார் என சிரஞ்சீவியே வெளிப்படுத்தியுள்ளார்.

சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆச்சார்யா’. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து த்ரிஷாவிலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தன்னுடைய கேரக்டரை கூறியபடி படமாக்கப்படவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

சிரஞ்சீவி படத்திலிருந்துதான் வருத்தத்துடன் விலகுவதாகவும் இருப்பினும் தெலுங்கு ஆடியன்ஸ்களை மிக விரைவில் ஒரு நல்ல படத்தில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆச்சார்யா படத்திலிருந்து த்ரிஷா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திரிஷா வெளியேறியது குறித்து சிரஞ்சீவி தரப்பில் இருந்து வேறொரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. அதில் த்ரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்காக மொத்தமாக தேதிகளைக் கொடுத்து விட்டதால்தான் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்