நேற்று விஜய் தொலைக்காட்சியில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படம் 'பாகுபலி 2' ஒளிபரப்பானது. இந்த படத்தை தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் பார்த்துள்ளதாக டிஆர்பி ரேட்டிங் கூறுகிறது
இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தின் விளம்பர இடைவேளையில் 'மெர்சல்' படத்தின் இரண்டு புரமோ வீடியோ ஒளிபரப்பாகியது. இந்த இரண்டு புரமோக்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் பாகுபலி 2' ஒளிபரப்பான அதே நேரத்தில் சன் டிவியில் விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஒளிபரப்பானது. விஜய் ரசிகர்கள் அதிகம் பார்க்க வாய்ப்பு இருக்கும் இந்த படத்தின் இடைவேளையில் 'மெர்சல்' புரமோ வீடியோவை கொடுக்காமல், 'பாகுபலி 2' படத்திற்கு மெர்சல் படக்குழு முக்கியத்துவம் கொடுத்தது விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இதுகுறித்து பல விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.