சுவாதியை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் யார்?

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (11:25 IST)
நடிகை சுவாதி ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அதை தொடர்ந்து, கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி ஆகிய படங்களில் நடித்தார். 


 


தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சி வேடம் தவிர்த்து, குடும்பபாங்கான கதாபாத்திரம் மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த சுவாதிக்கு, தற்போது 29 வயது ஆகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு திருமணத்தை நடத்த பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தனர்.

தொழில் அதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என்று பல வரன்களை பார்த்து தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்துள்ளனர். இந்த வருடம் இறுதியில் சுவாதியின் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் சுவாதியை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் யார் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்