சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தில், ஸ்ரேயா, தமன்னா, சனா கான் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சிம்புவின் ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரம், வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள்.
நிறைய காட்சிகளை எடுத்துவிட்டதால், படத்தை வெட்ட மனமில்லாமல், இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அதன்படி, முதல் பாகம் அடுத்த மாதம் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைக்கும், இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்துக்கும் வெளிவரப் போகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.