கேஜிஎஃப்- 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு ? படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (20:48 IST)
ஏப்ரல் 14 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் கேஜிஎஃப் 2 படத்தின்  முதல் நாள் வசூல்  குறித்து  தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து                                   நேற்று  கேஜிஎஃப் சாப்டர் 2  ரிலீசானது.

பீரியட் ஆக்சன் இப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ், இந்தி,  கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமான கே ஜிஎஃப்-2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கே.ஜி.எஃப் படக்குழு அறிவித்துள்ளனர்.

அதில்,   நேற்று ஒரு நாள் இந்தியா முழுவதும் ரூ .134.5 கோடிக்கு வசூல் குவித்துள்ளததாக ஒரு போஸ்டரில் வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்