ஷூட்டிங் சென்ற பிரபல நடிகை விபத்தில் பலி

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:37 IST)
போஜ்புரி நடிகை மனிஷா ராய் ஷூட்டிங்கிற்கு சென்ற வழியில். சாலை விபத்தில் பலியானார். 
போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் மனிஷா ராய். அவருக்கு வயது 45. அவர் வெள்ளிக்கிழமை படப்பிடிப்பிற்காக, தனது உதவியாளர் சஞ்சிவ் மிஷ்ராவுடன் பைக்கில் கிளம்பினார். மிஸ்ரா பைக்கை ஓட்ட மனிஷா பின்னால் அமர்ந்திருந்தார். உத்த பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள சித்தானி கிராமத்திற்கு  அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மனிஷா சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. உதவியாளர் மிஸ்ரா காயங்களுடன்  தப்பியுள்ளார். 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த போஜ்புரி கலைஞர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மனிஷாவின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்