நயன்தாராவுக்கு ஈஸியா கிடைச்சது, அஜித், விஜய்க்கு கிடைக்க மாட்டேங்குதே!

Webdunia
திங்கள், 29 மே 2017 (04:26 IST)
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் படாதபாடு பட்டு வருகிறது. அன்றும், இன்றும், என்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று கிட்டத்தட்ட அனைவரும் ஏற்று கொண்டிருக்கும் நிலையில் அந்த பட்டத்தை அல்லது அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற பலர் முயற்சித்து வருகிறார்.

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு பத்திரிகை வாக்கு நடத்தியதாக கடந்த சில வருடங்களுக்கு முன் தெரிவித்தது. அந்த பத்திரிகைக்கு விஜய் காசு கொடுத்ததாகவும் கிசுகிசு கிளம்பியது. அஜித் மட்டுமே அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு தகுதியானவர் என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடந்த பல வருடமாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக் ஓபராய் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் 'தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்' என்று ஒரே போடு போட்டார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.



 


இந்த நிலையில் மக்கள் சூப்பர் ஸ்டார்', 'யங் சூப்பர் ஸ்டார்' என்று தனக்குத்தானே சில நடிகர்கள் பட்டம் ஏற்று கொண்டு ரஜினி அளவுக்கு பில்டப் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்தவித எதிர்ப்பு இல்லாமல் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை நயன்தாரா மிக எளிதாக பெற்றுவிட்டார். ரஜினி, அஜித், விஜய் உள்பட எந்த ரசிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நயன்தாராக்கு எளிதாக கிடைத்த இந்த பட்டம், அஜித்-விஜய்க்கு கிடைக்க இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ? தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்