அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போகிறபோக்கைப் பார்த்தால் அதற்கு வாய்ப்பிருக்காது என்கிறார்கள். காரணம், ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருப்பதால், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை. எனவே, தீபாவளி ரிலீஸ் போட்டியில் இருந்து ‘விஸ்வாசம்’ விலகலாம் என்கிறார்கள்.