அஜித் பட கால்ஷீட்டை தெலுங்குப் படத்துக்குத் தாரைவார்த்த நயன்தாரா

செவ்வாய், 20 மார்ச் 2018 (20:51 IST)
அஜித் படத்துக்கு ஒதுக்கியிருந்த கால்ஷீட்டை, தெலுங்குப் படத்துக்கு கொடுத்துவிட்டார் நயன்தாரா.
 
அஜித் நடிப்பில் சிவா இயக்க இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வருகிற 23ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து விட்டது.
 
எனவே, ‘விஸ்வாசம்’ படத்துக்காக வைத்திருந்த கால்ஷீட்டைத் தூக்கி ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்கு கொடுத்துவிட்டார் நயன்தாரா. சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்