யானையுடன் சகஜமாக பழகிய விஷ்ணு விஷால் - காடன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
திங்கள், 15 மார்ச் 2021 (10:53 IST)
தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது.
மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாகிறது. அண்மையில் டிரெய்லர் வெளியாகியது.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் யானை மீது ஏறி பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். யானையும் அவருக்கு ஏற்றார் போன்று காலை தூக்கி மேலே ஏத்தி இறக்கிவிடுகிறது. இதோ அந்த வீடியோ