மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரெய்லர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை விநியோகஸ்தர்கள் ஆர்வமாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் சொல்லும் விலை அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். தமிழக திரையரங்க விநியோக உரிமை மட்டும் 27 கோடி ரூபாய் என சொல்லி வருகிறார்களாம். ஆனால் அந்த அளவுக்கு படத்திற்கு சந்தை மதிப்பு இல்லை என்று விநியோகஸ்தர்கள் கருதுவதால் யாரும் வாங்க முன்வரவில்லையாம்.