இளம் நடிகரின் புதிய படம் இன்று பூஜையுடன் தொடக்கம் !
வெள்ளி, 5 மார்ச் 2021 (18:28 IST)
விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகவுள்ள மோகன்தாஸ் என்ற படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் -ஐஸ்வர்யா ரஜேஷ் நடிப்பில் உருவாகவுள்ள படம் மோகஸ்தான். இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள விஷ்ணுவிஷால், களவு என்ற படத்தை இயக்கிய முரளி கார்த்தி என்பவரின் இயக்கத்தில் மோகன்தாஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.