பெற்றோர்களின் விருப்பத்துக்காக தெலுங்குப் படத்தில் நடிக்கும் விஷால்

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (18:34 IST)
விஷாலின் பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழில் நடிக்கும் தெலுங்கர்களில் விஷாலும் ஒருவர். தனது மகன் தாய் மொழியில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று யாருக்கும் விருப்பம் இருக்கத்தானே செய்யும்?
 
விஷால் பல வருடங்கள் முன்பே நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான நேரம் தகையாமல் இருந்தது. இப்போது இயக்குனர் சஷிகாந்த் இயக்கும் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
 
பெற்றோர்களின் விருப்பத்துக்காக நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறியவர், டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.