திரைத்துறை பிரச்சனையை அரசிடம் ஒப்படைக்க முடிவு: விஷால் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (17:18 IST)
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ,க்யூப் நிறுவனத்திற்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 1ஆம் தேதியில் இருந்து வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இன்னும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளரகளை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், 'திரையுலகில் இருக்கும் பிரச்சனைகளை களைந்து இந்த துறை சீரடைய வேண்டும் என்பதற்காகத்தான் வேலைநிறுத்தத்தை தொடங்கினோம். ஆனால் ஒரு மாதம் ஆகியும் பேச்சுவார்த்தை இழுத்து கொண்டே செல்கிறதே தவிர இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை

இந்த நிலையில் இந்த பிரச்சனை அரசிடம் ஒப்படைக்க தற்போது முடிவு செய்துள்ளோம். ஒரு அரசுக்கு அனைத்து துறையின் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டிய கடமை இருப்பது போல திரைத்துறையின் பிரச்சனையையுய்ம் சுமூகமாக தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம். விரைவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை சந்தித்து எங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் புதிய திரைப்படங்கள் வெளிவராது  என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்