சண்டைக்குத் தயாரான விஷால்

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (16:42 IST)
விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம், ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


 

 
விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’. லிங்குசாமி இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் தயாராக இருக்கிறது. விஷால் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன், வில்லி வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். முதல் பாகத்தில் விஷாலின் அப்பாவாக நடித்த ராஜ்கிரண், இந்தப் பாகத்திலும் தொடர்கிறார். விஷாலே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அன்று முதல் 40 நாட்களுக்கு சென்னையில் முக்கியக் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக இழுத்துக் கொண்டே வந்த இதன் படப்பிடிப்பு, தற்போதுதான் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்