வயதான நடிகர்களுக்காக விஷாலின் அசத்தல் ப்ளான்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (14:12 IST)
வயது முதிர்ந்த, ஆதரவற்ற நடிகர்களுக்காக, முதியோர் இல்லம் தொடங்குகிறார் விஷால்.


 

ஆதரவின்றித் தவிக்கும் வயதான நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்காக, முதியோர் இல்லம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது நடிகர் சங்கம். நடிகர் சங்க இணையதளத்தில் உறுப்பினர்களின் தகவல்களைப் பதிவு செய்வதற்காக விவரங்களைச் சேகரித்தபோது, பல மூத்த நடிகர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்ததாம்.

“அந்தக் காலத்தில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்தவர்கள் கூட இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி தவித்து வந்தனர். சிலர் வீட்டில் இருந்தும் சரியான கவனிப்பு இல்லை. இன்னும் சிலரோ நோயின் பிடியில் சிக்கித் தவித்து வந்தனர். அவர்களுக்காக இருப்பிடம், உணவு, நூலகம், மருத்துவ வசதியுடன் கூடிய முதியோர் இல்லத்தை அமைக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திலேயே இதற்கான திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால்.
அடுத்த கட்டுரையில்