விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (20:14 IST)
விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கி வரும் படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் 'அயோக்யா' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று மற்றொரு தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி நாளை இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
வெங்கட்மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்