விஷால் படத்தயாரிப்பாளர் திடீர் விலகல்: புதிய தயாரிப்பாளர் யார்/

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (22:01 IST)
விஷால் நடித்து முடித்துள்ள ’சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் விஜய்யின் மாஸ்டர் வெளியாகும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை ’அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர் இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த தயாரிப்பாளர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது 
 
விஷாலின் சம்பளம் மற்றும் நடிகர், நடிகைகளின் சம்பளம் ஆகியவற்றை கணக்கு போட்டு பார்த்தால் அந்த தயாரிப்பாளர் விஷாலின் படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் என்றால் நிச்சயம் நஷ்டம் வரும் என்று முடிவு செய்து அந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது விஷால் இந்த படத்திற்கான புதிய தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் தற்போது வரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது எனவே வேறு தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவில்லை என்றால் விஷாலே தனது சொந்த பேனரில் இந்தப் படத்தை தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்