விஜய்யுடன் மோதும் விஷால்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:15 IST)
விஜய் நடித்த படமும், விஷால் நடித்த படமும் நேரடியாக மோதிக் கொள்கின்றன.



 
தமிழுக்குப் பிறகு மலையாளத்தில்தான் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால், தமிழில் படம் வெளியாகும்போதே, மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். அதன்படி, தீபாவளிக்கு ரிலீஸாகும் ‘மெர்சல்’, கேரளாவிலும் வெளியிடப்பட உள்ளது. விஷால் நடித்துள்ள முதல் மலையாளப் படமான ‘வில்லன்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. விஷால் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ளார். ஹன்சிகாவும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

இதன்மூலம், மூன்றாவது முறையாக விஜய் – விஷால் இருவரும் நேரடியாக மோதுகின்றனர். 2007ஆம் ஆண்டு பொங்கலுக்கு ‘போக்கிரி’யுடன் ‘தாமிரபரணி’ மோதியது. அதன்பின்னர், 2014ஆம் ஆண்டு தீபாவளிக்கு ‘கத்தி’யுடன் ‘பூஜை’ மோதியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்