மருத்துவமனை வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த விஷால்!

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (13:11 IST)
அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்.
 
நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால்,டெல்லியில் சண்டைகோழி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது,  திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்  டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டதாகவும். பின்பு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக வதந்திகள் பரவியது.
 
இந்நிலையில்  விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் , நான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக வதந்திகள் வெளியாகின. தன் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துள்ளார். சில நாட்கள் தலைவலிக்காக ஓய்வு எடுக்க சென்றுள்ளதாகவும். ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் திரும்புவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்