பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதவனின் மாறா திரைப்படமும் விஷாலின் சக்ரா திரைப்படமும் வெளியாக உள்ளன.
கொரோனாவுக்கு பிறகான சினிமா வெளியீடுகளில் ஓடிடி தளங்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. நிறைய படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
இதையடுத்து இப்போது வரிசையாக படங்கள் ஓடிடி ரிலீஸுக்கு தயாராக உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதவன் நடித்துள்ள மாறா திரைப்படமும், விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளன. திரையரங்கில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் போட்டியிட உள்ள நிலையில் ஓடிடியிலும் பல படங்கள் ரிலீஸாக உள்ளன.