விருமன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதை நடிகர் கார்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு விருமன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக படத்தின் கதாநாயகன் கார்த்தி அறிவித்துள்ளார். மேலும் சிறப்பாக திட்டமிட்டு செயல்பட்டு முடித்த இயக்குனர் முத்தையா மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் ஆகியோரைப் பாராட்டியுள்ள படத்தின் தயாரிப்பாளரும் தனது அண்ணனுமான சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த படம் முடிந்ததும் கார்த்தி சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.