அஞ்சல விமலின் யமஹா லட்சியம்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (14:12 IST)
திலீப் சுப்பராயன் தயாரிப்பில் தொடங்கப்பட்ட அஞ்சல படம் பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு, சமீபத்தில் மீண்டும் உயிர்பெற்றது. விமல், நந்திதா, பசுபதி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் விமல் மெக்கானிக்காக நடிக்கிறார். யமஹா ஷேnரூம் வைக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். நந்திதாவுக்கு கல்லூரி மாணவி வேடம். 
 
படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இவர் மலையாளத்தில் ஹிட்டான உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது முக்கியமானது.