“அய்யோ தெரியாம அத பண்ணிட்டேன்….” கோப்ரா இசை வெளியீட்டில் விக்ரம் ஜாலி பேச்சு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:55 IST)
நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையடுத்து நேற்று ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய விக்ரம் தன் மகன் துருவ் விக்ரம் உடன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு பேசிய போது “அய்யோ தெரியாம நெஞ்சில் கை வச்சி பேசிட்டேன். உடனே ஹார்ட் அட்டாக்குன்னு கிளப்பி விட்டுடுவாங்க. எனக்கு உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அதை சொல்வதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். மேலும் ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்