எவ்வளவோ பாத்துட்டேன்.. இதெல்லாம் ஒன்னுமே இல்ல..! – விக்ரமின் பாசிட்டிவ் பேச்சு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:57 IST)
கோப்ரா பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுடன் தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் விக்ரம் நடித்து அஜய் ஞானமுத்து இயக்கி விரைவில் வெளியாக உள்ள படம் கோப்ரா. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

முன்னதாக உடல்நலக் குறைவால் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆன அவர் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்ற குழப்பம் நிலவியது.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகமாக பேசினார். அப்போது “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் என்னென்னவோ எழுதியிருந்தார்கள். நன்றாக இருந்தது. சிலர் என்னுடைய முகத்தை மார்பிங் செய்து வேறு நோயாளி உடலில் பொருத்தி போட்டோஷாப் செய்திருந்தார்கள். அதுவும் நன்றாகதான இருந்தது. எவ்வளவோ பாத்துட்டோம். இதெல்லாம் ஒன்னுமே இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்