கொரோனா நிவாரண நிதி; உதவிகரம் நீட்டிய நடிகர் விக்ரம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (15:23 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான நிவாரண நடவடிக்கைகளுக்காக நடிகர் விக்ரம் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ அவசர செலவினங்களுக்காக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் இன்று முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் நிதியாக அளித்துள்ளார். மேலும் பல திரை பிரபலங்களும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்