மேற்கு தொடர்ச்சி மலை - விஜய் சேதுபதியின் இரண்டாவது தயாரிப்பு

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2014 (10:46 IST)
இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, நானும் ரவுடிதான், ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதில் ஆரஞ்சு மிட்டாய் விஜய் சேதுபதியின் தயாரிப்பு. இதில் தலைமுடி நரைத்த வயதானவராக விஜய் சேதுபதி வருகிறார்.
 
இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். 
 
சுசீந்திரனிடம் இணை இயக்குனராக இருந்த லெனின் பாரதி மேற்கு தொடர்ச்சி மலையின் இயக்குனர். இசை இளையராஜா. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.